யானையுடன் மோதியவர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் » Sri Lanka Muslim

யானையுடன் மோதியவர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில்

elephant

Contributors
author image

ABDUL SALAM YASEEM - TRINCO

திருகோணமலை ஹொரவ்பொத்தானை பிரதான வீதி பாம்மதவாச்சி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் யானையுடன் மோதி விபத்துக்குள்ளானதில் நேற்றிரவு (13) திருகோணமலை பொது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு விபத்துக்குள்ளானவர் திருகோணமலை,செல்வநாயகபுரம் இலக்கம் 800யைச்சேர்ந்த பீ.உதயகுமார் (48வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது  மஹதிவுல்வெவ பிரதேசத்தில் உள்ள பிராந்திய கால்நடைப்பண்ணைக்கு சொந்தமான பண்ணைக்கு  கடமைக்காக வீட்டிலிருந்து சென்று கொண்டிருந்த போது வீதியால் கடக்க முற்பட்ட யானையுடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் அதனாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்தவர் திருகோணமலை பொது வைத்தியசாலை அதீதிவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதுடன் விபத்து தொடர்பாக மொறவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Web Design by The Design Lanka