யாரோ சொல்லி கொடுத்துள்ளதை ஒப்புவிக்கும் தாய். மகளின் பிணத்தில்….? - Sri Lanka Muslim

யாரோ சொல்லி கொடுத்துள்ளதை ஒப்புவிக்கும் தாய். மகளின் பிணத்தில்….?

Contributors

எனது பிள்ளையை சித்திரவதை செய்துள்ளார்கள். அதனை எனது பிள்ளை என்னிடம் மறைத்துள்ளது.

என்னதான், யார் தான், எப்படித்தான் சொல்லி கொடுத்தாலும், ஒப்புவிக்கும் போது உண்மை வெளிப்பட்டே ஆகும்.

1. அந்த பிள்ளைக்கு சித்திரவதை நடந்துள்ளதை, பிள்ளை சொல்லாமல், எப்படி தாய் அறிய முடியும்? இதுவே இவர் சொல்வது பொய் என்பதற்கான முதற் சான்று.


2. அதனை வேறு யாராவது சொல்லியிருந்தால், அவர் யார்? அதனை ஏன் வெளிப்படுத்தவில்லை? மரணித்த சிறுமி சித்திரவதை செய்யப்பட்டதை பார்த்த எச் சான்றுகளும் இதுவரை வெளிப்படவில்லை. அப்படியானால், எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டதை தாய் அறிய முடியும்?


3. ஒரு வேளை ஆவியாக வந்து, இதனை மரணித்த பெண் சொன்னாரோ?


4. இத் தாயின் இப் பேச்சு ஊகத்தின் அடிப்படையிலானது. ஊகத்தை உறுதியாக ஏற்க முடியுமா? வைத்திய அறிக்கைகளில் சித்திரவதை செய்யப்பட்டதற்கான சான்றுகள் இல்லை என்றே கூறப்பட்டுள்ளது.


5. வீட்டில் வேலை செய்த நபர் அடித்ததை, அவரின் தொலைபேசியிலேயே தைரியமாக கூறிய சிறுமி, ஏன் குறித்த குடும்பத்தினர் சித்திரவதை செய்ததை சொல்லவில்லை? அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்பது தானே அதன் பொருள்.


6. இந்த தாயை யாராவது மூளைச் சலவை செய்கிறார்களா?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

Web Design by Srilanka Muslims Web Team