யார் என்பது பற்றி முசலி பிரதேச மக்கள் நன்கறிவார்கள் » Sri Lanka Muslim

யார் என்பது பற்றி முசலி பிரதேச மக்கள் நன்கறிவார்கள்

rishad

Contributors
author image

Irshad Rahumadullah

   தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா


புத்தளத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இணையத்தளத்தில் முசலியூரான் என்ற பெயரில் வெளிவந்த ஆய்வு தொடர்பில் எனது பார்வை சென்றது,அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் என்பது அமைச்சர் றிசாத் பதியுதீன்  தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி தொடர்பில் மேற்படி யூரான் குறிப்பிட்டிருந்தார். யூரான் யார் என்பது பற்றி முசலி பிரதேச மக்கள் நன்கறிவார்கள். இருந்த போதும் சமூக இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட விடயங்களை சரிப்படுத்துவதும், மக்களுக்கு உண்மைத்தன்மையினை விளக்கப்படுத்துவது விடயம் தெரிந்தவர்களின் கடமை என்பதால் இங்கு அதனை தருகின்றேன்.

நடை பெற்றுமுடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் அமைச்சர் றிசாத் பதியுதீனை தலைவைராக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சியானது ஏறு முகமே தவிர இரங்கு முகம் அல்ல என்பதற்கு தேர்தல் முடிவில் கட்சி எடுத்துக் கொண்டுள்ள ஆசனங்களின் எண்ணிக்கை போதுமானது என்பதற்கு ஆதாரங்கள் நிறைய உண்டு என்பதாலும்,முசலியூரானின் கேள்வியின் பின்னணியில் வன்னியில் மக்களினால் ஒதுக்ககப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கின்றது என்பதற்கு அவர் கையாண்டுள்ள சொற்கள் ஆதாரமாகும்.

 கட்சியின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்கள் நாடு பூராகவும் தமது ஆளுமையினாலும்,மக்களின் ஏகோபித்த அங்கீகாரத்தினாலும் 159 ஆசனங்களை பெற்றுளளதுடன்,பல சபைகளின் ஆட்சியினை தீர்மானிக்கும் சக்தியாகவும் மாறியுள்ளதை தாங்கிக் கொள்ள முடியாத முசலியூரான் போன்ற வக்காலத்து வாங்குகின்றவர்கள் அமைச்சர் றிசாத் அவர்களின் சொந்த மாவட்டத்தில் ஆட்சிகளை அமைக்க முடியாமல் போயுள்ளதாக கூறியிருப்பது, அவரின் அரசியல் அறிவிலித்தன்மையினை எடுத்துகாட்டுகின்றது என்பதை புலப்படுத்தி நிற்கின்றது.

கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம் பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அப்போதைய ஆளும் அரசாங்கமான பொது ஜன ஜக்கிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு முசலியில் 6 ஆசனங்களை பெற்று அந்த சபையினை தன்வசமாக்கிக் கொண்டது. அப்போதைய சபை அங்கத்தவர்களின் எண்ணிக்கை 9 ஆகும். அன்றைய தேர்தல் முறை என்பது விகிதாசார தேர்தல் முறையாகும். தற்போதைய தேர்தல் முறை என்பது வட்டார முறையாகும் என்பதை இந்த முசலியூரான் தெரியாமல் கிடைக்கும் பணத்துக்கு ஊதியம் செய்துள்ளதை இதன் மூலம் அறியமுடிகின்றது.

யுத்தம் நிறைவுற்று சில வருடங்களில் நடத்தப்பட்ட தேர்தலில் 61.86 சதவீதமான வாக்குகளை மக்கள் அமைச்சர்  றிசாத் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் அளித்து சபையினை வழங்கினர். அந்த சபையின் இறுதிகாலம் வரைக்கும் சிறந்ததொரு ஆட்சியினை அங்கு முன்னெடுக்க முடிந்தது. அதன் பிற்பாடு கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் முசலி பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஜக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து  போட்டியிட்டு 5427 வாக்குகளை பெற்று 7 ஆசனங்களை பெற்றுள்ளது.

தற்போதைய சபையின் எண்ணிக்கை 16 ஆகும்,இந்த நிலையில் கடந்த காலத்தை விட மேலதிகமாக ஒரு ஆசனத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றுள்ளது என்பது கட்சியின் வீழ்ச்சியா அல்லது எழுச்சியா என கேட்கவிரும்புகின்றேன். அமைச்சரின் சொந்த மாவட்டமான மன்னாரில்  மன்னார் பிரதேச சபையில் கடந்த 2011 ல் 2 ஆசனங்கள் மட்டுமே கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 07 ஆசனங்களையும், மன்னார் நகர சபையில் 1 ஆசனத்தை கொண்டிருந்த அமைச்சரின் கட்சி இம்முறை 4 ஆசனங்களையும், மாந்தை மேற்கு பிரதேச சபையில் 2011 ல் 3 ஆசனங்களை கொண்டிருந்த அமைச்சரின் கட்சி 11 ஆசனங்களையும், நானாட்டான் பிரதேச சபையில் 2 ஆசனங்களையும் கொண்டிருந்த அமைச்சர் றிசாத் பதியுதீனின் கட்சி இம்முறை 5 ஆசனங்களையும் பெற்றுள்ளதுடன், ஆட்சியினை தீர்மானிக்கும், ஆட்சி அமைக்கும் பலத்தினையும் கொண்டுள்ளது பற்றி ஆழ்ந்து நோக்கமால் எழுந்தமான முறையில் மக்களுக்கு பிழையான தகவல்களையும், தரவுகளையும் வழங்குவதன் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களுக்கு சொந்த மண்ணில் இடமில்லை என்பதாக பெரும் புரழியினை ஏற்படுத்த இந்த முசலியூரான் என்கின்ற முஸ்லிம் காங்கிரஸின் ஏஜெண்டு புணைப் பெயரில் புழுகித்தள்ளுகின்றதை மறுதலிக்க வேண்டியுள்ளது.

முசலியூரான் கூறுவது போன்று அமைச்சர் றிசாத் பதியுதீன் நாடு பூராவும் ஓடுவதை நிறுத்தியிருந்து அவரது மாவட்டத்தில் ஓடியிருந்தால் ஆட்சியினை தமதாக்கி கொள்ளமுடிந்திருக்கும் என்று தெரிவித்துள்ளது.அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் செயற்பாட்டினை கூறுவதாகும்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் தமது மாவட்ட மக்கள் நம்பிக்கை கொண்டவர்கள் செய்ததை,செய்யவுள்ளதற்கு நன்றி கடமையுள்ளவர்கள் என்பதை அறிந்திருந்ததால் தான் தனது மாவட்டத்தினை விடுத்து இந்த நாட்டு சிறுபான்மை முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஏனைய மாவட்டங்களில் கால் பதித்து அந்த மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்துள்ளார்.திருகோணமலையில் 18 ஆசனங்கள்,அம்பாறையில் 31 ஆசனம்,மன்னாரில் 34 ஆசனங்கள்,வவுனியாவில் -17 ஆசனங்கள்,மட்டக்களப்பில் -14 ஆசனங்கள், முல்லைத்தீவில் -12 ஆசனங்கள், குருநாகலயில் -5 ஆசனங்களும், அநுராதபுரம்-04,களுத்துறை-01,பேருவளை -01 ,கொழும்பு -02,கிளிநொச்சி -02,யாழ்ப்பாணம் -02,கம்பஹா-01,புத்தளம் -07 ஆசனங்களை பெற்றுள்ளார்,கட்சியினை ஆரம்பித்து சில வருடங்களுக்குள் முழு நாட்டிலும் அமைச்சர் றிசாத் பதியுதீனை தலைவராக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு 14 மாவட்டங்களில் போட்டியிட்டு  160 ஆசனங்களையும்,,முசலியூரானின் தலைவர்  17 வருடங்கள் பழமை வாய்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 171 ஆசனஙகளை பெற்றுள்ளதை வைத்து முசலியூரான் போன்ற கிளிப்பிள்ளைகள் எத்தனை பேர் ஒவ்வொரு பெயர்களில் எழுந்து வந்து எழுதினாலும்,எதைச் சொன்னாலும் சத்தியமும்,உண்மையும் ஒரு போதும் மரணிப்பதில்லை என்பதை சொல்லி வைக்கவிரும்புகின்றேன்.

எது எப்படியோ ரவூப் ஹக்கீம் தேசிய அரசியலில் இருக்கின்ற ஒருவர், ஹிஸ்புள்ளா கத்தான்குடிக்கும், அதாவுல்லா அக்கரைப்பற்றுக்கும் மட்டும் அரசியல் தலைமைத்துவம் வழங்குபவர்கள் என்பதைக் கூட நாலுபேர் சொல்வதை கேட்க முடியாத செவிடனாகிப் போயுள்ள முசலியூரானின் மதிகெட்ட கணிப்பும், கருத்தும் சமூகத்திலும் மன்னார்  மாவட்டத்திலும் எதையும் அசைத்து விடாது என்பதை தெரிவிக்க  விரும்புகின்றேன். முஸ்லிம் காங்கிரஸ் தலைமையினை பிரகடனப்படுத்திய சாய்ந்தமருதுவில் கிடைத்த மறியாதையில் இருந்து  விளங்கிவிட்டது.யார் கையில் இருந்த வாக்குகளை இழந்துவிட்டு மீண்டும் எவ்வித நிபந்தனையுமின்றி ஆதரவு தருகின்றேன் என்று இழுது புலம்புகின்றது என,

பிழையான எடுகோள்களையும்,ஏதாவது பைகளுக்கு கிடைக்கின்றது என்பதற்காக முசலி மக்களினை கொச்சைப்படுத்தி அவர்களின் ஊர் பெயரை வைத்து நாலுகாசு உழைக்கும் முசலியூரான் என்ற  பொய் பெயரில் எழுதும்ஆசாமிகள் ஒரு போதும் திருந்தமாட்டார்கள் என்பது எனது அவதானமாகும்.

 

Web Design by The Design Lanka