யார் தடுத்தாலும் தாக்குதல்களைத் தொடரப் போவதாக இஸ்ரேல் தெரிவிப்பு..! - Sri Lanka Muslim

யார் தடுத்தாலும் தாக்குதல்களைத் தொடரப் போவதாக இஸ்ரேல் தெரிவிப்பு..!

Contributors

இஸ்ரேலுக்குள் ரொக்கட்கள் விழும் வரை தாக்குதல்களை நிறுத்த மாட்டோம் என சூளுரைத்துள்ளார் இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு.

பலஸ்தீனம் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் ஆரம்பித்த கடந்த ஒரு வார காலத்தில் இதுவரை 148 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை பல கட்டிடங்கள் வான் தாக்குதல் மூலம் தகர்க்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹமாஸின் ரொக்கட் தாக்குதல்களால் இதுவரை 10 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தரப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில், சண்டை மேலும் உக்கிரமடைவதைத் தவிர்ப்பதற்கான பேச்சுவார்த்தையில் அமெரிக்க ஈடுபட்டுள்ள அதேவேளை, யார் தடுத்தாலும் தாக்குதல்களைத் தொடரப் போவதாக இஸ்ரேல் தெரிவிக்கின்றமையும் இன்றைய தினம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இது தொடர்பில் கூடி ஆராயவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team