யாழில் மரக்கறி வியாபாரிகள் போராட்டம் - சில்லறைக் கடைகளில் மரக்கறிகளை விற்க தடை விதிக்குமாறும் கோரிக்கை! - Sri Lanka Muslim

யாழில் மரக்கறி வியாபாரிகள் போராட்டம் – சில்லறைக் கடைகளில் மரக்கறிகளை விற்க தடை விதிக்குமாறும் கோரிக்கை!

Contributors

யாழ்ப்பாணம், கல்வியங்காடு, செங்குந்த  சந்தையில் மரக்கறி வியாபாரத்தினை மேற்கொள்ளும் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் , யாழ்ப்பாணம் மாநகர சபை , நல்லூர் பிரதேச சபை மற்றும் கோப்பாய் பொலிஸார் ஆகியோருக்கு மகஜர் ஒன்றினையும் கையளித்து உள்ளனர்.

சந்தைக்கு வெளியே, சந்தை சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள பலசரக்கு கடைகளில் முன்னெடுக்கப்படும் மரக்கறி வியாபாரத்தை தடை செய்ய கோரியே இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் வியாபாரிகள் தெரிவிக்கையில்,

“சந்தைக்கு வெளியே உள்ள பலசரக்கு கடைகளில் மரக்கறி வியாபாரம் நடைபெறுவதனால் , சந்தைக்குள் வந்து மக்கள் மரக்கறியினை கொள்வனவு செய்யாமல் , வீதியோரமாக இருக்கும் பலசரக்கு கடைகளில் மரக்கறியினை கொள்வனவு செய்துகொண்டு செல்கின்றனர்.

அதனால் சந்தையின் உள்ளே மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடும் எம்மிடம் மக்கள் வருவதில்லை. சில கடைகளில் சுகாதாரமின்றி மரக்கறிகளை கொட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

சந்தைக்கு வெளியே உள்ள கடைகளில் மரக்கறி வியாபாரம் நடைபெறுவதனால், எமது சந்தை சுற்று வட்டாரத்தில் உள்ள; யாழ்.மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை ஆகியவற்றின் ஆளுகைக்குள் உள்ள கடைகளில், மரக்கறி வியாபாரத்தை தடை செய்ய கோரி இரு சபைகளிடமும் மகஜர் கையளித்துள்ளோம்” என்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team