யாழில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த மஸ்ரதீன் ஆரம்ப பாடசாலை புனரமைப்பு » Sri Lanka Muslim

யாழில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த மஸ்ரதீன் ஆரம்ப பாடசாலை புனரமைப்பு

asp (2)

Contributors
author image

Farook Sihan - Journalist

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசல் அருகில் கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த மஸ்ரதீன் ஆரம்ப பாடசாலை தற்போது புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இப்பாடசாலை கடந்த காலங்களில் பல அறிஞர்களை யாழ் முஸ்லீம் சமூகத்திற்காக உருவாக்கியதுடன் 2009 ஆண்டு யுத்தம் நிறைவடைந்த நிலையில் புனரமைக்கப்படாது காணப்பட்டது.

இந்நிலையில் முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசல் தலைவர் முபீன் மேற்கொண்ட முயற்சியின் பயனாக கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மீலாதுன் நபி நிகழ்வின் ஊடாக ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டு புனரமைக்கப்பட்டுள்ளது.

மிகவும் கவர்ச்சியாக நிறப்பூச்சி பூசப்பட்டு மாணவர்களின் பாவனைக்கு தற்போது முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. 

asp (1) asp (2)

Web Design by The Design Lanka