யாழில் வடமாகாண சபையினருக்கு எதிராக கேலி சித்திரங்கள் - துண்டுப்பிரசுரங்கள் - Sri Lanka Muslim

யாழில் வடமாகாண சபையினருக்கு எதிராக கேலி சித்திரங்கள் – துண்டுப்பிரசுரங்கள்

Contributors
author image

Editorial Team

வடமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிராக மூன்று விதமான துண்டுப்பிரசுரங்கள் யாழ். மாவட்டத்தின் பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.

 

‘அன்றும் அவளே இன்றும் அவளே’ என அனந்தி சசிதரனை கேலி செய்யும் விதத்தில் ஒரு துண்டுப்பிரசுரமும் வடமாகாண முதலமைச்சர் ீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் வாகனம் மற்றும் வீடு ஆகியவற்றின் கனவுகளுடன் வாழ்வதாக வரைபடங்கள் மூலம் சித்தரிக்கப்பட்ட ஒரு துண்டுப்பிரசுரமும் ஒட்டப்பட்டுள்ளன.

 

அத்துடன், வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு இன்றைய தினத்துடன் ஒரு வருட காலம் முடிவடைந்த நிலையிலும் வடமாகாண சபை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை செயற்படுத்தவில்லை என்பதுடன், மக்கள் இன்னமும் கஷ்டங்கள், சிரமங்களின் மத்தியில் வாழ்வதாகவும் குறிப்பிட்டு ஒரு துண்டுப்பிரசுமும் ஒட்டப்பட்டுள்ளது.

 

Web Design by Srilanka Muslims Web Team