யாழ்ப்பாணத் தமிழர்களுக்காக தீக்குளித்த முஸ்லிம் சகோதரன் - Sri Lanka Muslim

யாழ்ப்பாணத் தமிழர்களுக்காக தீக்குளித்த முஸ்லிம் சகோதரன்

Contributors

-நன்றி பாலன் தோழர்-

புகைப்படம் -பாலன் தோழர்

அப்துல் ரவூப் இற்கு வீர வணக்கம்!

ஈழத் தமிழர்களுக்காக பல உணர்வாளர்கள் தமிழ் நாட்டில் தங்கள் உயிரை தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்களுள் முதன்மையானர் அப்துல் ரவூப். 1995ம் ஆண்டு பெரம்பலூரில் ஈழத் தமிழர்களுக்காக தன் உயிரை தியாகம் செய்தார்.

1995ம் ஆண்டு நான் துறையூர் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். அப்போது ஒரு காவலர் இந்த இஸ்லாமிய இளைஞனின் தியாக செய்தியை என்னிடம் கூறினார். அப்போது இதைக் கேட்டு நான் மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். ஏனெனில் யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டபோது எந்த யாழ்ப்பாண தமிழர்கள் அதை தடுக்காமல் மௌனமாக இருந்தார்களோ அவ் யாழ்ப்பாண தமிழர்களுக்கு இன்னல் நிகழ்ந்தபோது முஸ்லிம் என்றும் பாராது தமிழன் என்ற உணர்வில் தனக்குதானே தீக்குளித்து இறந்தவன் இந்த ரவூப் என்ற முஸ்லிம் இளைஞன்.

உண்மையில் இந்த முஸ்லிம் இளைஞனின் மரணம் யாழ்ப்பாண தமிழர்களின் முகத்தில் ஓங்கியறைந்தது போல் நான் உணர்ந்தேன். இந்த சிறிய வயதில் எவ்வளவு பெரிய மனம் இருந்திருந்தால் இத்தகைய மாபெரும் தியாகத்தை அவன் புரிந்திருப்பான். தனது இனத்தவர்களை விரட்டியடித்தாலும் அதனை பெரிது படுத்தாது தமிழன் என்ற உணர்வில் தன்னை தியாகம் செய்ததன் மூலம் இந்த முஸ்லிம் இளைஞன் மிக உயர்ந்து நிற்கிறான். அவன் பெயர் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.

தியாகி அப்துல் ரவூப் நினைவாக தமிழ் முஸ்லிம் மக்கள் ஜக்கியப்பட்டு சிங்கள இனவெறிக்கு எதிராக போராட வேண்டும். இதுவே நாம் அவனுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகும். அவன் நினைவாக இதனை உறுதி பூணுவோம்.

தியாகி ரவூப்பிற்கு வீர வணக்கம்!

Web Design by Srilanka Muslims Web Team