யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர்விநியோக மற்றும் கழிவகற்றல் திட்டம் தொடர்பான மீளாய்வு - Sri Lanka Muslim

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர்விநியோக மற்றும் கழிவகற்றல் திட்டம் தொடர்பான மீளாய்வு

Contributors
author image

A.S.M. Javid

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர்விநியோக மற்றும் கழிவகற்றல் திட்டத்திற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் மீளாய்வுக் குழுவினர், திட்டத்தினது முன்னேற்றம் தொடர்பாக மீளாய்வு செய்வதற்கென வருகை தந்திருந்தனர்.

 

இக்குழுவினர் பிரதம செயலாளர் திருமதி.ஆர்.விஜயலட்சுமி அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை பிரதம செயலாளர் அலுவலகத்தில் கடந்த 15 செப்ரெம்பர் 2014 அன்று மேற்கொண்டிருந்தனர். ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரிகள் நிகொல வவுச்சிலோர், சாம்பா சிறிவர்த்தன, கமல் தகநாயக்கா, என்.ஏ.பி. சல்கொட, திட்ட பணிப்பாளர் எந்திரி.பாரதிதாசன் மற்றும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள் ஆகியோர் இக்கலந்துரையாடலில் பங்குபற்றி இருந்தனர்.

 

Web Design by Srilanka Muslims Web Team