யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் : மக்கள் பணிமனையின் ஊடக அறிக்கை - Sri Lanka Muslim

யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் : மக்கள் பணிமனையின் ஊடக அறிக்கை

Contributors
author image

Farook Sihan - Journalist

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்.

பொதுமக்களுக்கான அறிவித்தல்

மீள்குடியேற்ற அமைச்சின், ‘நீண்ட கால இடம்பெயர்விற்கு பின் மீள்குடியேற்றத்திற்கான வடக்கு செயலணியின்’ 2017ம் ஆண்டுக்குரிய வேலைத்திட்டங்கள். யாழ்ப்பாணம், வேலணை சாவகச்சேரி, பிரதேசங்களில் நடைமுறைப்படுத்துவதற்காக நான்குகோடி ரூபாவிற்கு (40 மில்லியன்) அங்கிகாரம் கிடைத்துள்ளது. மாஸா அல்லாஹ் இதன்படி பின்வரும் 38வேலைத்திட்டங்கள் மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணப் பிரதேசத்தில்
1. J/86, J/87 கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள 17உள் வீதிகளுக்கு கொங்கிறீட் வீதிகள் அமைத்தல்
2. J/86, கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள சனசமூக நிலைய புனருத்தானமும் தளபாடங்கள் விநியோகம்.
3. J/87, கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள அபூபக்கர் ஜூம்ஆ பள்ளிவாசலில் பொம்மைவெளி மக்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விநியோகத்திட்டம்
4. J/87இ கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள 1ம் குறுக்கு அராலிவீதி, புதிய சோனகதெரு முழுமையா சுற்றுமதில்களுடன் பொது பாவனைக்கான கிணறு
5. J/88 – கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள இறால் வாடி வீதி புனரமைப்பு
6. J/88 – கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள அபூபக்கர் பள்ளிவாசல் முன்வீதி புனரமைப்பு

ஒஸ்மானியாக் கல்லூரிக்கான வேலைத்திட்டம்
1. மாணவர்களுக்கான மலசலகூடம்
2. கல்லூரி ஜின்னா மைதானத்திற்கான பார்வையாளர் மண்டபம்
3. கல்லூரிக்கான தண்ணீர் விநியோகத்திட்டம்
4. கீழ்ப்பகுதி மேடை புனரமைப்பு
5. கல்லூரிக்கான பெயர் வளையம்
6. பாதுகாப்பு உத்தியோகத்தருக்கான அறை
7. மஹ்மூத் மண்டபத்திற்கான VIP கதிரைகள்

கதீஜா கல்லூரிக்கான வேலைத்திட்டம்
1. வகுப்பறை கூறை வேலை
2. காதி அபூபக்கர் வீதியிலுள்ள கதிஜா கல்லூரிக்கான சுற்றுமதில் கேற் வேலை

வேலணை பிரதேச செயலகம்

1. மண்கும்பான் பள்ளிவாசல் உள்வீதி
2. உள் வீதிகளுக்கான மின்சார விளக்குகள்
3. நெய்னாதீவு இஸ்லாமிய சனசமூக நிலைய வீதி அமைத்தல்
4. நெய்னாதீவு சனசமூக நிலையத்திற்கான பொதுக்கிணறு அமைத்தல்
5. நெய்னாதீவு பள்ளிவாசலுக்கு முன்னுள்ள அணைக்கட்டு புனரமைத்தல்

சாவகச்சேரி பிரதேச செயலகம்.
1. தற்காலிக இருப்பிட வசதி பெறுவோருக்கான பொதுமலசல கூடம்
2. கிணறு திருத்தமும் தண்ணீர் விநியோகமும்
3. மின்சார கம்பமும் மின் விளக்குகள் அமைத்தலும்
4. தற்போது இத் திட்டங்களுக்கான செலவு மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கும் வேலைத்திட்டங்கள் அப்பிரதேச செயலகங்கள் ஆரம்பித்து விட்டதாகவும் விரைவில் வேலைத்திட்டங்கள் அவ்வப்பகுதியில் முன்னெடுக்கப்படும் என கௌரவ அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனின் யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற இணைப்பாளரும், மக்கள் பணிமனையின் தலைவருமான மௌலவி பி.ஏ. எஸ் சுப்யான் குறிப்பிட்டதுடன் இவ் அபிவிருத்தித் திட்டங்கள் வேறு எந்த ஒரு திட்டங்களின் கீழ் உள்வாங்கப்படவில்லை என்றும் இத்திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் சிறப்பாக நடந்து முடிந்திட அனைத்துத் தரப்பினரும் முழு ஒத்துழைப்புக்களையும் தரும்படி வேண்டிக் கொண்டார்.

Web Design by Srilanka Muslims Web Team