யாழ் ஊடகவியலாளர்களிற்கு பயந்து ஓடிய அமைச்சர் றவூப் ஹக்கீம்? » Sri Lanka Muslim

யாழ் ஊடகவியலாளர்களிற்கு பயந்து ஓடிய அமைச்சர் றவூப் ஹக்கீம்?

DSCF8136

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிற்கு பயந்து கொண்டு அமைச்சர் றவூப் ஹக்கீம் தனது வாகனங்களை அடிக்கடி மாற்றியதுடன் தனது கட்சி இரகசிய கூட்டம் நடாத்தும் இடங்களை அடிக்கடி மாற்றியதால் பரபரப்பு அங்கு ஏற்பட்டிருந்தது.

நேற்று (10) மன்னார் பிரதேச சபையை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியதை அடுத்து திருகோணமலையில் இருந்து விசேட விமானம் ஒன்றின் ஊடாக பலாலியை வந்தடைந்த அமைச்சர் றவூப் ஹக்கீம் குழுவினர் மன்னார் பகுதி ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பீனர்கள் வட்டார உறுப்பினர்கள் என நூற்றுக்கணக்கானவர்களை செயலமர்வு என்ற போர்வையில் யாழ்ப்பாணம் நீல திமிங்கிலம் ஹோட்டலுக்கு அழைத்து விட்டு அமைச்சர் மட்டும் ஜெட் விங் கோட்டலில் அதில் கலந்து தயாராக இருந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த செயலமர்வினை அறிந்த ஊடகவியலாளர்கள் அவ்விடம் சென்று செய்தி சேகரிக்க தயாரான நிலையில் வன்னி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குனைஸ் பாறுக் மற்றும் வடக்கு மாகாண முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் நியாஸ் ஆகியோரின் ஆதரவாளர்களால் தடுக்கப்பட்டனர்.

தொடர்ந்து அமைச்சர் றவூப் ஹக்கீமின் உத்தரவிற்கமைய ஊடகவியலாளர்களை அவ்விடத்தில் இருந்து அகற்ற பொலிஸார் விசேட அதிரடிப்படையினரை வரவழைத்து அச்சுறுத்தும் பாணியில் செயற்பட்டதை அவதானிக்க முடிந்தது. அத்துடன் மாலை 5 மணியளவில் ஆரம்பமாக இருந்த குறித்த மறைமுக செயலமர்வு இரவு 10 மணியளவில் ஊடகவியலாளர்கள் அவ்விடத்தில் இருந்து அகன்று சென்ற பின்னர் வேறு இடமொன்றில் நடைபெற்றதாக அறிய முடிகிறது.

இது தவிர குறித்த செயலமர்வு என தெரிவித்து அமைச்சர் றவூப் ஹக்கீம் தனது கட்சி மன்னார் முக்கியஸ்தர்கள் மீது கடும் கோபத்துடன் வாதப்பிரதிவாதங்களை மேற்கொண்டதுடன் தனது குறித்த கூட்டத்தை நடாத்த விடாமல் பின்தொடர்ந்த குறித்த ஊடகவியலாளர்களை கடிந்து கொண்டதாகவும் அவ்விடத்தில் இருந்து அக்கட்சி முக்கியஸ்தர் தெரிவித்தார்.

மேலும் குறித்த செயலமர்வு என்ற போர்வையில் நடாத்தப்பட்ட கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மன்னார் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடம் பறிகொடுத்திருந்தமையாகும் .

மன்னார் பிரதேச சபையின் முதலாவது அமர்வு நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போது அகில இலங்கை மக்கள் காங்கிரசைச் சேர்ந்த எஸ்.எச். முஜாஹிர் 11 உறுப்பினர்களின் ஆதரவுடன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இவருக்கு முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த இஸ்ஸதீன் எனும் உறுப்பினர் திடிரென கட்சி மாறி வாக்களித்திருந்தார்.இந்நிலையில் ஒரு ஆசனத்தினால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தவிசாளர் பதிவியை முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடம் தவிசாளர் பதவியை பறிகொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

DSCF8126 DSCF8128 DSCF8136 DSCF8150

Web Design by The Design Lanka