யாழ் ஒஸ்மானியா அதிபர் பதவிக்கான விண்ணப்ப முடிவு நாளை - Sri Lanka Muslim

யாழ் ஒஸ்மானியா அதிபர் பதவிக்கான விண்ணப்ப முடிவு நாளை

Contributors
author image

Farook Sihan - Journalist

யாழ் கல்வி வலயத்தில் உள்ள ஒஸ்மானியா கல்லூரி(பாடசாலை வகை 1 AB) அதிபர் பதவிற்கான விண்ணப்பம் கோரப்பட்ட நிலையில் நாளையுடன்(19) முடிவுத்திகதி நிறைவடைகின்றது.

 

கடந்த சில தினங்களிற்கு முன்னர் மேற்படி பாடசாலைக்கான அதிபர் வெற்றிடம் தொடர்பில் குடாநாட்டு முக்கிய ஊடகங்களில் விளம்பரம் ஊடாக வட மாகாண கல்வி அமைச்சு விண்ணப்பங்களை கோரி இருந்தது.
ஆனால் எதிர்பார்த்தளவு விண்ணப்பங்கள் இது வரை கிடைக்கவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இவ்வதிபர் பதவிக்கு வட மாகாணத்தில் கடமையாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை 111 ஐச் (பொது ஆளணி) சேர்ந்த உத்தியோகத்தர்களிடமிருந்தும் இலங்கை அதிபர் சேவை 1,2-1,மற்றும் 2-11 ஐச் சேர்ந்த உத்தியோகத்தர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது.

 

அடுத்து இலங்கை அதிபர் செவை வகுப்பு 1,2-1,ஐச் சேர்ந்த உத்தியோகத்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாத சந்தர்ப்பங்களில் மாத்திரம் இலங்கையின் அதிபர் சேவை வகுப்பு 2-11 ஐச்  சேர்ந்தவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டிருந்தது.

 

விண்ணப்பிக்க விரும்புவோர் வலயக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று வலயக்கல்வி பணிப்பாளரின் சிபார்சுடன் 2041.09.19 ஆம் திகதிக்கு முன்னர் செயலாளர் கல்வி அமைச்சு வட மாகாணம் செம்மணி வீதி நல்லூர் யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.

 

ஆனாலும் குறைந்த அளவில் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.
முக்கியமாக மேற்படி பாடசாலை பாரம்பரியமாக முஸ்லீம் சமூகத்தவர்களின் பாடசாலையாக இருப்பதனால் விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரிகளின் முஸ்லீம் சமூத்தைச் சேர்ந்தவர்களிற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.           

 

ஏற்கனவே 13 வருடங்களாக பதில் அதிபராக கடமையாற்றி வந்த முன்னாள் அதிபரின்   இடமாற்றத்தினை   அடுத்தே இவ்வெற்றிடம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Web Design by Srilanka Muslims Web Team