யாழ் ஒஸ்மானியா அதிபர் விவகாரம் - ஆதரவாக,எதிராக துண்டுப்பிரசுரம் - Sri Lanka Muslim

யாழ் ஒஸ்மானியா அதிபர் விவகாரம் – ஆதரவாக,எதிராக துண்டுப்பிரசுரம்

Contributors
author image

Farook Sihan - Journalist

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி அதிபர் விடயம் தொடர்பாக அவரை ஆதரித்தும்,மற்றுமொரு துண்டுப்பிரசுரத்தில் அவர் ஆளுமையற்ற அதிபர் என குறிப்பிட்டும் இரு துண்டுப்பிரசுரங்கள் நேற்று விநியோகிக்கப்பட்டன.

 

முஹம்மதியா  ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற ஜும்மா தொழுகையின் பின்னர் மக்களிடம் விநியோகிக்கப்பட்டதனை காண முடிந்தது.

 

இத்துண்டுப்பிரசுரத்தை யாழ் மாநகர சபை உறுப்பினர் பி.எஸ் .சி சுபியானின் ஆதரவாளர்களும்,மற்றுமொரு துண்டுப்பிரசுரத்தை சமூக சேவகரும் பருத்திதுறை பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினருமான கே.எம் நிலாமின் ஆதரவாளர்களும் விநியோகித்தனர்.

 

கடந்த சில தினங்களிற்கு முன்னர் யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் அதிபராக 13 வருடங்களாக கடமையாற்றி வந்த முன்னாள் அதிபர்.எம் முபாறக் இடமாற்றம் பெற்றுச்செல்வதை அடுத்து மேற்படி துண்டுப்பிரரம் அவருக்கு ஆதரவாகவும் ,எதிராகவும் பிரசுரக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

25   23

 

29  28

 

27  26

 

30

 

24

Web Design by Srilanka Muslims Web Team