யாழ்.குடாநாட்டில் வாழைப்பழத்திற்கு வந்த நிலை - Sri Lanka Muslim

யாழ்.குடாநாட்டில் வாழைப்பழத்திற்கு வந்த நிலை

Contributors
author image

Editorial Team

யாழ்.குடாநாட்டில் வாழைப்பழத்தின் விலை தினம் தினம் அதிகரித்துச் செல்கின்றது. நேற்றுமுன்தினம் சந்தை நில வரப்படி ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 120 ரூபாவைத் தாண்டியுள்ளது.

 

தற்போது ஆலய உற்சவங்கள், சுபவைபவங்கள் போன்றவை இடம்பெற்றுவரும் வேளையில் வாழைப்பழத்தின் பாவனை அதிகரித்துள்ளது.

 

கடும் வறட்சி, வெப்பம் போன்ற காரணத்தினால் அனேகமானோர் வாழைச் செய்கையில் ஆர்வம் காட்டவில்லை. அதனைவிட குடாநாட்டில் இருந்து தென்பகுதிக்கும் கூடுதலான வாழைக்குலைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

 

இவற்றால் குடாநாட்டுச் சந்தைகளுக்கு போதியளவு வாழைக் குலைகள் வருவதில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

கடந்த வாரத்தில் 80 ரூபாவாக விற்கப்பட்ட ஒரு கிலோ கதலி வாழைப்பழம் நேற்று 120 ரூபாவைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (LR)

Web Design by Srilanka Muslims Web Team