யாழ்.துரையப்பா விளையாட்டரங்கு புனரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் அமைச்சர் பசிலினால் -படங்கள். - Sri Lanka Muslim

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கு புனரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் அமைச்சர் பசிலினால் -படங்கள்.

Contributors

-பழுலுல்லாஹ் பர்ஹான்

 

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் புனரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

 

துரையப்பா விளையாட்டரங்கில் மேற்படி அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் (27) இடம்பெற்றது.

 

முன்பதாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே சிங்ஹா ஆகியோரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வரவேற்றதைத் தொடர்ந்து துரையப்பா விளையாட்டரங்கின் பிரதான வாயிலில் அதிதிகள் வரவேற்கப்பட்டனர்.

 

தொடர்ந்து நினைவுக்கல்லினை இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே சிங்ஹா திரைநீக்கம் செய்து வைத்தார்.

 

தொடர்ந்து புனரமைப்பிற்கான அடிக்கற்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே சிங்ஹா, வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார், சில்வேஸ்திரி அலென்ரின், ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா உள்ளிட்ட அதிதிகள் நாட்டி வைத்தனர்.

 

145 மில்லியன் ரூபா செலவில் இவ் அரங்கு புனரமைக்கப்படவுள்ள அதேவேளை, இதற்கான நிதியுதவியினை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இதன்போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உனேஸ் பாருக், இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் முதன்மை செயலாளர் ஜஸ்ரின் மோகன், உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்.

 

11

 

12

 

13

 

14

 

15

 

16

 

Web Design by Srilanka Muslims Web Team