யாழ் பல்கலைக்கழகம் டிசம்பர் 2 இல் மீளவும் ஆரம்பம். - Sri Lanka Muslim

யாழ் பல்கலைக்கழகம் டிசம்பர் 2 இல் மீளவும் ஆரம்பம்.

Contributors

(பா.சிகான்)

யாழ் பல்கலைக்கழக கல்வி செயற்பாடு டிசம்பர் 2 திகதி மீளவும் ஆரம்பமாகலுள்ளது.

கடந்த 3 வாரங்களாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் திங்கட்கிழமை மீள இயங்கவுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இலங்கையிலுள்ள சகல பல்கலைக்கழகங்களுக்கும் நவம்பர்11-17 திகதிவரை பொதுநலவாய மாநாட்டுக்காக பொது விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ச்சியாக யாழ் பல்கலை நிர்வாகம் எடுத்த முடிவினால் டிசம்பர் 1 திகதி வரை மாணவர்களுக்கு விடுமுறை வழங்க உத்தேசித்திருந்தது.

மருத்துவ பீடம் வழமை போன்று இயங்க ஏனைய பீடங்களான கலை இவணிகம்இவிஞ்ஞான பீடங்கள் அரையாண்டு கல்வி செயற்பாடுகள் முழுமையாக நிறைவுராமல் திடிரென இடைநிறுத்தப்பட்டன.

மேலும் மேற்குறித்த விடுமுறை காலங்களில் பல்கலைக்கழகத்தில் மற்றும் விடுதியில் தங்கியிருத்தல்இபல்கலையில் மாணவர்கள் உள்நுழைதல் தடைசெய்யப்பட்டிருந்த நிலையில் திங்கள் மீளவும் வழமை போன்று ஆரம்பமாகவுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team