யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! Photos - Sri Lanka Muslim

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! Photos

Contributors

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களைச் சேர்ந்த  மாணவர்களும் இன்றைய தினம், பல்கலைக்கழகத்தின் உள்வளாகத்தில் எதிர்பார்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

ஏனைய பல்கலைக்கழக மாணவர்களை விட, யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாத்திரம் நீண்ட நாட்களாக விடுமுறை விடுத்தமை, மாணவர் ஒன்றியத்தினால் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகத்தினர் நடைமுறைப்படுத்தாமை ஆகியவற்றைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு எதிராக பதாகைகளை தாங்கியவாறு மாணவர்கள் அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இந்நிலையில், பல்கலைக்கழத்திற்கு வெளியே கலகம் அடக்கும் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடந்த மாதம் 11ஆம் திகதியிலிருந்து இந்த மாதம் முதலாம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Web Design by Srilanka Muslims Web Team