யாழ் முஸ்லிம் வட்டார பாலர் பாடசாலைகளுக்கான சீருடைகள் வழங்கிவை - Sri Lanka Muslim

யாழ் முஸ்லிம் வட்டார பாலர் பாடசாலைகளுக்கான சீருடைகள் வழங்கிவை

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

என்.எம்.அப்துல்லாஹ்


வடக்கு மாகாணசபை உறுப்பினர் . அய்யூப் அஸ்மினின் பிரமான அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ்ப்பாணம் முஸ்லிம் பிரதேசத்தின் மூன்று பாலர் பாடசாலை சிறார்களுக்கான சீருடைகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன. அல்ஹதீஜா பாலர் பாடசாலை, அல் அஸ்ஹார் பாலர் பாடசாலை, மலரும் மொட்டுக்கள் பாலர் பாடசாலை ஆகியவற்றுக்கே இவ்வாறு உதவிகள் வழங்கப்பட்டன.

இங்கு கருத்து வெளியிட்ட மாகாண சபை உறுப்பினர் ; பாலர் கல்வியின் முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. அதற்கு உரிய முக்கியத்துவத்தை நாம் வழங்க வேண்டும், பாலர் பாடசாலைகளில்தான் ஒரு குழந்தை முதன் முதலாக வெளி உலகத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. இங்கிருந்தான் அவர் தன்னுடைய எதிர்காலத்தை நோக்குகின்றார் எனவே பாலர் பாடசாலைகள் மிகவும் சிராக இருத்தலும் இயங்குதலும் அவசியமாகின்றது.

இதற்கு உரிய பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுதல் வேண்டும், உரிய வசதி வாய்ப்புகள் பாலர் பாடசாலைகளில் ஏறபடுத்திக் கொடுக்கப்படுதல் வேண்டும். எம்மால் முடியுமான உதவிகளை நாம் இந்தப் பாடசாலைகளுக்கு வழங்குகின்றோம், ஆனால் இவை போதுமானவையல்ல, மாணவர்களின் பெற்றோர்களும் இது விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதேபோன்று சமூக ஆர்வலர்களும் இதுவிடயத்தில் அதிக கவனம் எடுத்தல் அவசியமாகின்றது. என்றும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் யாழ் முஸ்லிம் சிவில் சமூக அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஜனாப் எம்.எம்.எம்.நிபாஹிர், ஜனாப் எம்.எல்.லாபிர், ஜனாப் ஏ.சி.ஹஸ்ஸான் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

j-jpg2

Web Design by Srilanka Muslims Web Team