யாழ் மேயரை விடுதைலை செய்க-சபையில் தமிழ் எம்.பிக்கள் கோரிக்கை! - Sri Lanka Muslim

யாழ் மேயரை விடுதைலை செய்க-சபையில் தமிழ் எம்.பிக்கள் கோரிக்கை!

Contributors

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள யாழ் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி மணிவண்ணனை விடுவிப்பதற்கு அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஶ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் மாநகர சபை முதல்வர், கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்றில் இன்று உரையாற்றுகையில் அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள யாழ் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி மணிவண்ணன் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ள அமைப்பாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் குறித்த அமைப்பினை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் செயற்படுவது பாரிய குற்றச்செயலாகும் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை யாழ் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 2 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சட்டத்தரணி மணிவண்ணனிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் ஆகியோர் நேற்றிரவு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டனர்.

இதன்போது யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் ஆகியோர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team