யுத்த அழிவுக்குள்ளானவர்கள் வாழும் மாவட்டம் என்பதால் எல்லோரும் தேவையுடையவர்காளக இருக்கின்றோம் - Sri Lanka Muslim

யுத்த அழிவுக்குள்ளானவர்கள் வாழும் மாவட்டம் என்பதால் எல்லோரும் தேவையுடையவர்காளக இருக்கின்றோம்

Contributors

கல்விக்கு முன்னுரிமை கொடுத்து மாணவர்கள் செயற்படுவார்களெனில்,எமது மாவட்டம் புத்தி ஜீவிகளையும்,துறைசார்ந்தவர்களையும் உருவாக்கும் என்று வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

 

முருங்கன் மஹா வித்தியாலயத்தில் இடம் பெற்ற மன்னார் கல்வி வயலத்திற்குட்பட்ட 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய 300 மாணவர்களை  பாராட்டும் நிகழ்வில் கலந்த கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

 

மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் உட்கட பலரும் கலந்து கொண்டனர்.

 

மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு பேசுகையில் கூறியதாவது – எமது மாவட்டத்தில் இன்று பொறியிலாளர்கள்,வைத்தியர்கள்,என்று  பலர் உருவாகி வருகின்றார்கள்,அந்த வரிசையில் இந்த மாணவ சமூகமும் இணைந்து கொள்ள வேண்டும்.என்பது எனது எதிர்ப்பார்ப்பாகும்.அரசியல் வாதிகள் என்ற வகையில் இந்த மாவட்ட மக்களுக்கும்,மாணவ சமூகத்திற்கும் எதையெல்லாம் செய்ய முடியுமோ,அதனை எவ்வித இனபாகுபாடுகளுமின்றி பெற்றுக் கொடுத்துவருகின்றேன்.

 

குறிப்பாக கல்விக்காக எதனை அதிகாரிகள் கேட்கின்றார்களோ,அதனை பெற்றுக் கொடுப்பதுடன்,அதற்கான அனுமதியினை வழங்கி வந்துள்ளேன்.குறுகிய சிந்தணைகளை நாம் கொண்டவர்கள் அல்ல,யுத்த அழிவுக்குள்ளானவர்கள் வாழும் மாவட்டம் என்பதால் எல்லோரும் தேவையுடையவர்காளக இருக்கின்றோம்.

 

இங்கிருந்து இடம் பெயர்ந்தவர்கள் மீள் அவர்களது பிரதேசங்களில் குடியமர வேண்டும்.அவர்களது பிள்ளைகள் இப்பாடசாலைகளில் கல்வி கற்று சாதணைகள் படைக்க வேண்டும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.

 

43251

Web Design by Srilanka Muslims Web Team