யுனெஸ்கோவில் இருந்து விலகிய அமெரிக்கா, இஸ்ரேல் » Sri Lanka Muslim

யுனெஸ்கோவில் இருந்து விலகிய அமெரிக்கா, இஸ்ரேல்

mukathis

Contributors
author image

BBC

ஐ.நா.வின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்காவும், அதைத் தொடர்ந்து இஸ்ரேலும் வெளியேறியுள்ளன.

இஸ்ரேலுக்கு எதிராக யுனெஸ்கோ பாகுபாடு காட்டுவதாகக் கூறி அமெரிக்கா தமது முடிவை அறிவித்தது. அதையடுத்து இஸ்ரேலும் விலகுவதாக அறிவித்தது. 

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, யுனெஸ்கோ பாலஸ்தீனத்தை உறுப்பினராக சேர்த்துக்கொண்டதை அடுத்து அமெரிக்கா, யுனெஸ்கோவுக்கு வழங்கிவந்த நிதியைக் குறைத்தது.

எனினும் அமெரிக்கா செலுத்தவேண்டிய பங்களிப்பு நிலுவை கூடிக்கொண்டே வந்ததும் தங்களுக்கு சுமையாக இருந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Web Design by The Design Lanka