யுவான் வந்தால் டொலர் இறங்கும், ஷெஹான் விளக்கம்..! - Sri Lanka Muslim

யுவான் வந்தால் டொலர் இறங்கும், ஷெஹான் விளக்கம்..!

Contributors

சீனாவின் பணம் இலங்கைக்குள் வருவதால் டொலருக்கு எதிரான பெறுமதியும் அதிகரித்திருப்பதாகவும் இதை விளங்கிக் கொள்ளாமல் சீன கரன்சி இலங்கைக்குள் வருவது தொடர்பில் அரசியல்வாதிகள் புலம்புவதாகவும் தெரிவிக்கிறார் ஷெஹான் சேமசிங்க.

சீனாவினால் வழங்கப்படும் கடன் தொகையால் 205 ரூபா வரை ஏறியிருந்த டொலருக்கு எதிரான பெறுமானம் தற்போது 195 ரூபாவாக குறைந்திருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

துறைமுக நகரம் தனி நாடாக இயங்கப் போவதாகவும் அதற்காக சீனா பணத்தைக் கொட்டுவதாகவும் விஜேதாச ராஜபக்ச விசனம் வெளியிட்டிருந்ததற்கு பதிலளிக்கு முகமாகவே ஷெஹான் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team