யூதர்கள் இஸ்லாத்தை தழுவுவது அதிகரிப்பு..! - Sri Lanka Muslim

யூதர்கள் இஸ்லாத்தை தழுவுவது அதிகரிப்பு..!

Contributors

Aashiq Ahamed –

ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தின் (இஸ்ரேல்??) யூதர்கள் இஸ்லாமை தழுவது அதிகரித்து வருவதாக சில மாதங்களுக்கு முன்பு வந்த செய்திகள் அதிகப்படியான கவனத்தை ஈர்த்தன. இப்படியான செய்திகள் வெளிவருவதை ஆக்கிரமிப்பு அரசு விரும்புவதில்லை என்ற போதிலும், இத்தகவல் வெளிவர முக்கிய காரணம், இஸ்ரேலிய தீவிர வலதுசாரி அமைப்பான Lahava தான்.

அதிகப்படியான யூதர்கள் இஸ்லாமை தழுவுவதாகவும், அவர்களை மீட்பதிற்கான முயற்சிகளை தாங்கள் மேற்கொண்டிருப்பதாகவும் இந்த அமைப்பு கூற செய்தி வைரலானது. எவ்வளவு இஸ்ரேலிய யூதர்கள் இஸ்லாமை தழுவுகிறார்கள் என்பது போன்ற தகவல்கள் வெளிவருவது கடினம் என்ற போதிலும், ஆக்கிரமிப்பு அரசின் கடந்த கால அதிகாரப்பூர்வ தகவலின்படி, 2003-ல் 40 பேரும், 2006-ல் 70 பேரும் இஸ்லாமை தழுவியிருக்கின்றனர்.

இதுவே 2005-2007 காலக்கட்டத்தில் 250-ஆக உயர்ந்தது. இதில் கணிசமானோர் பெண்கள் ஆவர். இஸ்லாமை தழுவும் யூதர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகாரித்து வருவதாக கூறும் Lehava, இதில் பலர் திருமணத்திற்காக இஸ்லாமை தழுவுவதாக கூறுகிறது.

2018-இல் பிரபல இஸ்ரேலிய பத்திரிக்கையாளரான மஹதி மஜீத் இஸ்லாமை தழுவியது ஊடகங்களில் தலைப்பு செய்தியானது இங்கே குறிப்பிடத்தக்கது.

செய்திக்கான ஆதாரங்கள்:

1. Sputnik News

2. Middle East Monitor

3. TRT world.

Web Design by Srilanka Muslims Web Team