யூ ட்யூப் தலைமையகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் » Sri Lanka Muslim

யூ ட்யூப் தலைமையகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பெண்

_100691391_gettyimages-941560582

Contributors
author image

BBC

வடக்கு கலிஃபோர்னியாவில் உள்ள யூ ட்யூபின் தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு மூன்று பேரை காயமாக்கியதுடன் தன்னை தானே சுட்டுக் கொண்டார் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

36 வயது நபர் ஒருவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார் அவர் தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணின் ஆண் நண்பர் என்று சிபிஎஸ் செய்தி தெரிவிக்கிறது. 32 வயது மற்றும் 27 வயது மதிக்கத்தக்க பெண்கள் இருவர் சுடப்பட்டுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி மதியம் 12.28 மணிக்கு சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் வந்ததாக சான் ப்ரூனோவின் தலைமை காவல் அதிகாரி ஈத் பார்பெரினி தெரிவித்தார்.

அதிகாரிகள் அங்கு சென்றவுடன், “பதட்டமான சூழலையும்” அதிகமானோர் “தப்பி ஓடுவது” போன்ற காட்சிகளையும் காண முடிந்ததுள்ளது.

துப்பாக்கி குண்டு காயத்துடன் நிறுவன தலைமையக வாசலில் ஒருவர் கிடந்தார் என பார்பெரினி தெரிவித்தார்.
சிறிது நிமிடங்களில் பெண் ஒருவர் தன்னைதானே சுட்டுக் கொண்டார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர் கை துப்பாக்கியை வைத்திருந்தார் என்றும் அவரின் அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் போலிஸார் தெரிவித்தனர்.

யூ ட்யூப் தலைமையகத்தில் சுமார் 1700 பேர் பணி புரிகின்றனர்; கூகுளுக்கு சொந்தமான இந்த நிறுவனம் அந்த பகுதியின் மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது.

பணியாளர்கள் தங்கள் இரு கைகளையும் தூக்கிக் கொண்டு நடப்பது போன்ற காட்சிகளை உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

மற்றொரு காட்சியில், போலிஸாரின் சோதனைக்கு முன்னதாக பணியாளர்கள் வரிசையில் வெளியேறுகின்றனர்.

இது தொடர்பாக பேசிய யூ ட்யூப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், துரிதமாக செயல்பட்ட போலிஸாரை பாராட்டியுள்ளார்.

“மேலும் இன்று யூ டட்யூப்பை சார்ந்தவர்கள், அங்கு பணிபுரிபவர்கள் என அனைவரும் இந்த குற்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள். எங்கள் மனம் இதில் காயமடைந்தவர்களை நினைத்து கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

Web Design by The Design Lanka