ரஞ்சனுக்காக சிறைக்குள் கைத் தொலைபேசி கண்டுபிடிப்பு, விசாரணைகள் ஆரம்பம்..! - Sri Lanka Muslim

ரஞ்சனுக்காக சிறைக்குள் கைத் தொலைபேசி கண்டுபிடிப்பு, விசாரணைகள் ஆரம்பம்..!

Contributors

நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தின் பின்னணியில் சிறைவாசம் அனுபவித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்காக சிறைச்சாலைக்குள் கைத் தொலைபேசி கொண்டு வரப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

5 லட்சம் ரூபா செலவில் இவ்வாறு சிறைச்சாலைக்குள் கொண்டு வரப்பட்ட கைத்தொலைபேசி, புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றதன் பின்னணியில் பரிசோதனை நடாத்தப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க தற்போது அகுனுகொலபலஸ்ஸ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team