ரஞ்சன்ராமநாயக்க விவகாரத்தை ஜெனீவா கொண்டு செல்ல முயற்சி..! - Sri Lanka Muslim

ரஞ்சன்ராமநாயக்க விவகாரத்தை ஜெனீவா கொண்டு செல்ல முயற்சி..!

Contributors

ரஞ்சன் ராமநாயக்காவை அரசியல் கைதி என கருதி அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரத்தை ஜெனீவாவிற்கு கொண்டு செல்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையையும் ஏனைய மனித உரிமை அமைப்புகளையும் எவ்வா அணுகுவது என தனது கட்சி ஆராயவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்க வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்தே நாங்கள் இந்த விவகாரத்தை ஜெனீவா கொண்டு செல்லவுள்ளோம் நாங்கள் அவரை சிறையில் சந்தித்தவேளை அவர் தனது விவகாரத்தை ஜெனீவாவிற்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டார் என ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.


தனக்கு மன்னிப்பு வழங்குவதற்கு அதிகாரிகள் தொடர்ச்சியாக மறுத்துவருவதால் தன்னை அரசியல் கைதிகயாக கருதுவதாக ரஞ்சன் ராமாநாயக்க தெரிவித்துள்ளார் என ஹெக்டர் அப்புஹாமி குறிப்பிட்டுள்ளார்.
கொலைகுற்றத்தில் ஈடுபட்டமைக்காக மரணதண்டனை வழங்கப்பட்டவர்கள் உட்பட பலருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் ஆனால் ரஞ்சன் ராமநாயக்க அரசியல் கட்சியை பிரதிநிதித்துவம் செய்பவர் என்பதால் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவில்லை என ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team