ரஞ்சன் ராமநாயக்க முதலமைச்சர் வேட்பாளரா? - Sri Lanka Muslim

ரஞ்சன் ராமநாயக்க முதலமைச்சர் வேட்பாளரா?

Contributors

எதிர்வரும் மேல்மாகாண சபை தேர்தலுக்காக, ஐக்கிய தேசிய கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை நியமிக்கவுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

இது தொடர்பாக கட்சியின் தலைமைத்துவ சபை மற்றும் வேட்பு மனு சபை ஆகியன அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இது தொடர்பான இறுதி தீர்மானம் நாளைய தினம் எட்டப்படவுள்ளது.

 

 

இது குறித்து எமது செய்தி பிரிவு ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை தொடர்பு கொண்டு வினவியது.

 

 

அதற்கு பதிலளித்த அவர், முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக தாம் கட்சியிடம் கோரிக்கை விடுத்ததாக குறிப்பிட்டார். (sfm)

Web Design by Srilanka Muslims Web Team