ரணிலின் அறைக்குள் விரியன் பாம்பு - Sri Lanka Muslim
Contributors

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற அலுவலகத்திற்குள் ஒன்றரை அடி நீளமான விரியன் பாம்பு இருந்தமை பாராளுமன்ற பாராளுமன்ற கட்டிடத்தொகுதியின் மூன்றாம் மாடியில் அமைந்திருக்கும் குளிரூட்டப்பட்ட அலுவலகத்திலிருந்தே மேற்படி விரியன் பாம்பு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்குள் இருந்த விரியன் கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து அவர் தெய்வாதீன மாக உயிர் தப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
நேற்றைய தினம் பாராளுமன்றத்திலுள்ள தனது அலுவலகத்திற்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது கணினியூடாக இணையத்தளத்திற்கு செல்ல முற்பட்டுள்ளார். இணையத்தளம் செயலிழந்து காணப்பட்டதால் பாராளுமன்ற தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் இணையத்தளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவேளை எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்திற்கு அருகில் இருந்த கூடையொன்றை நகர்த்தியபோது அதன்பின்பக்கத்தில் ஒன்றரை அடி நீளமான விரியன் பாம்பு ஒன்று இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு சிறு பதற்றமும் சந்தேகங்களும் எழுந்ததாக எதிர்க்கட்சித் தலைவரின் பாராளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஜனாதிபதியின் பாராளுமன்ற வருகையை முன்னிட்டு நேற்று முன்தினம் புதன்கிழமை விசேட பாதுகாப்பு பிரிவினர் பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியின் ஒவ்வொரு அறைகளையும் மண்டபங்களையும் முழுமையாக சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில் எப்படி குளிரூட்டப்பட்டிருக்கும் அலுவலகத்துக்குள் விரியன் பாம்பு வந்தது என்பது குறித்து சந்தேகம் எழுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.vk

தகவல்தொழில் நுட்ப உத்தியோகத்தர்களால் நேற்று வியாழக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team