ரணில், கரு, சஜித் இன்று மீண்டும் சந்திக்கிறார்கள் - Sri Lanka Muslim

ரணில், கரு, சஜித் இன்று மீண்டும் சந்திக்கிறார்கள்

Contributors

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான பிரிதொரு சந்திப்பு இன்று 24-10-2013 இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த தினங்களில் இவர்களுக்கு இடையில் பேச்சு வார்த்தை இடம்பெற்றிருந்த நிலையில், தீர்மானங்கள் எவையும் எட்டப்படாத நிலையில் இன்றைய தினம், மீண்டும் பேச்சு வார்த்தை இடம்பெறவுள்ளது.

இதனிடையே, ஐக்கிய தேசிய கட்சியின் பிரச்சினைகள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடல்களின் இறுதி தீர்மானம் எதிர்வரும் ஓரிரு தினங்களில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ச அத்தநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team