ரணில், கரு, சஜித் நாளை சந்திக்க உள்ளனர்! இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக அறிவிப்பு! - Sri Lanka Muslim

ரணில், கரு, சஜித் நாளை சந்திக்க உள்ளனர்! இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக அறிவிப்பு!

Contributors

ஐக்கிய தேசியக்கட்சியில் ஸ்தாபிக்கப்பட உள்ள தலைமைத்துவச் சபை சம்பந்தமாக இறுதி முடிவை எடுக்கும் நோக்கில் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய ஆகியோர் நாளைய தினம் சந்தித்து இறுதி முடிவை எடுக்க உள்ளதாக அந்த கட்சி அறிவித்துள்ளது.

இந்த இறுதி தீர்மானம் தொடர்பில் எதிர்வரும் 4 ம் திகதி நடைபெறும் ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அறிக்கையிடப்பட உள்ளது.

ஸ்தாபிக்கப்பட உள்ள தலைமைத்துவச் சபையின் பணிகள், உறுப்பினர்களின் எண்ணிக்கை, பொறுப்பு மற்றும் கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக நாளை நடைபெறவுள்ள சந்திப்பில் தீர்மானங்கள் எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team