ரணில் - சந்திரிக்கா அவசர சந்திப்பு - Sri Lanka Muslim
Contributors

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கடந்த ஞாயிற்றுக் கிழமை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்தித்துள்ளார்.

இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பு உத்தியோகபூர்வமற்ற சந்திப்பு என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர பாணந்துறையில் உள்ள அவருக்கு சொந்தமான வீட்டில் இராபோசன விருந்தையும் ஏற்பாடு செய்திருந்தார்.

சந்திரிக்காவுக்கு ரணிலுக்கும் இடையிலான சந்திப்பில் திஸ்ஸ அத்தநாயக்க, விஜேதாச ராஜபக்ஷ மற்றும் கரு ஜயசூரிய ஆகியோரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேல் மாகாண சபைத் தேர்தல், அடுத்த பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து இதன் போது பேசப்பட்டுள்ளது.

எதிரணியில் உள்ள அரசியல் கட்சிகளை இணைத்து கூட்டணி ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் இந்த சந்திப்பு தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை.(lw)

Web Design by Srilanka Muslims Web Team