'ரணில் புத்திசாலி என்பதில் மாற்றுக்கருத்தில்லை' - விமல்! - Sri Lanka Muslim

‘ரணில் புத்திசாலி என்பதில் மாற்றுக்கருத்தில்லை’ – விமல்!

Contributors

‘நாட்டு மக்களுடன் மிகவும் குறைவாகக் கலந்துரையாடும் ஒரே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ என்றே கூற வேண்டும். அவரது  செயற்பாடுகளை அவதானிக்கும் போதும்  ஒரு சில வேளைகளில் அவர் ஊமையா என்று கூட எண்ணத்தோன்றும்’ என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

“மஹிந்த ராஜபக்‌ஷவை எவ்வளவு விமர்சித்தாலும் அவர் மக்களுடன் நெருக்கமான உறவைக் கையாண்டார் என்பதை மறுக்க முடியாது. மக்களின் பிரச்சினைகள் பலவற்றை மஹிந்த ராஜபக்‌ஷ விளங்கிக்கொண்டிருந்தார். அவ்வப்போது மக்களை சந்தித்து பலதரப்பட்ட விடயங்களை கலந்துரையாடுவார்.

எனினும் தற்போதைய ஜனாதிபதி அவ்வாறு அல்ல.  அவர் மீது ஆரம்பத்தில் இருந்தே அவதானித்த பாரிய குறைபாடு இதுவாகும் என்றார்.

ரணில் விக்கிரமசிங்க மீது எவ்வளவு விமர்சனங்களை முன்வைத்தாலும், அவர் புத்திசாலி என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையேல் சுயாதீன உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு வருகை தந்து பிரதமர் பதவியை எடுக்க முடியாது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team