ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் பேச்சு - Sri Lanka Muslim

ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் பேச்சு

Contributors

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களும் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் கூடிப் பேசிக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

 

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பகுதிக்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சீ.யோகேஸ்வரன் எம்.பி.,யின் ஆசனத்தில் அமர்ந்திருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி.க்கு அருகில் சென்று பேச்சுக் கொடுத்தார்.

 

இதன் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சீ. யோகேஸ்வரன், பி. அரியநேத்திரன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட எம்.பி.க்கள் குழுமி நின்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசிக்கொண்டிருந்தனர்.

 

 

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் பின்னர் அங்கிருந்து சென்றார். இதனையடுத்து கூட்டமைப்பு எம்.பி.க்கள் அவ்விடத்தில் மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது

 

 

Web Design by Srilanka Muslims Web Team