ரமழான் கவிதை » Sri Lanka Muslim

ரமழான் கவிதை

ramadan2.jpg3

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

— மெளலவி ஐ. ஏ. காதிர் கான், டீ.எச். ( தீனிய்யா),
கல்லொழுவை,
மினுவாங்கொடை.


ரமழான் ;
மூன்று முத்துக்கள்…!

உபவாச காலம்
இந்த உயரிய ரமழான்…
“ஷஹ்ருல் முபாரக்”
இந்த மாதத்தின் மகிமை…

முதற் பகுதி ரஹ்மத்…
நடுப் பகுதி பாவமன்னிப்பு…
இறுதிப் பகுதி
நரக நெருப்பு விடுதலை…
இவை இம்மாதத்தின்
மூன்று முத்துக்கள்…

பசித்திரு தனித்திரு விழித்திரு…
முத்திருவுக்கும் பயிற்சி கொடுக்கும் மாதம்…

அல் குர்ஆன் அருளப்பட்ட மாதம்…
“பத்ர்” யுத்தம் நிகழ்ந்து வெற்றி பெற்ற மாதம்…
ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவாம் “லைலத்துல் கத்ர்” இரவைத் தரும் மாதம்…

இன்பம் களிப்பு தரும் மாதம்…
உணவைச் சுருக்கி
தர்மத்தைப் பெருக்கும் மாதம்…
மமதையை மடக்கி மரணத்தைச் சிந்திக்க வைக்கும் மாதம்…

ரமழான் பொறுமையின் மாதம்…
மக்கள் சுகதுக்கங்களில் பங்கு கொள்ளும் மாதம்…
முஃமினின் உணவு
விஸ்தரிக்கும்
மாதம்…

ரமழானில் நான்கு விஷயங்கள் உண்டு…
இரண்டு இரட்சகனை திருப்திப்படுத்தும்…
இரண்டு தேவைகளை நிறைவேற்றும்…

திருக்கலிமாவை அதிகமாக மொழிவதும்
அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவதும்
இரண்டு சுடர்கள்…
சொர்க்கம் கேட்பதும்
இறைவனிடம் நரகத்தை விட்டும் பாதுகாப்பு தேடுவதும் இரண்டு பொக்கிஷங்கள்…

நோன்பு நோற்போருக்கு இருவகை சந்தோஷம்…
ஒன்று நோன்பு துறக்கும் நேரம்…
மற்றொன்று அல்லாஹ்வை தரிசிக்கும் நேரம்…
நோன்பு அல்லாஹ்வுக்கும் மனிதனுக்கும் மாத்திரம் தெரிந்த வணக்கம்…

நோன்பு வணக்கங்களில் மிகச்சிறந்த இபாதத்…
நோன்பின் உயர்வுக்கு எல்லையே இல்லை…

சீரும் சிறப்பும் பொலிவும் பெற்று…
புதுத்தெம்பும் ஊட்டும் புனித ரமழான்
மாண்பின் மகிமையே…

Web Design by The Design Lanka