ரமழான் முடிந்த பின்... » Sri Lanka Muslim

ரமழான் முடிந்த பின்…

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

+++++++++++++++++++
Mohamed Nizous


அருள் மறை மீண்டும்
அலுமாரி மேல் உறங்கும்
இருள் நேரத் தொழுகை
இல்லாது மறைந்து போகும்

சூரியன் உதித்த பின்
சுபஹுகள் அரங்கேறும்
பேரிச்சம் பழ போத்தல்
பிரியா விடை பெறும்

மோதினும் ஹஸ்ரத்தும்
முன் சfப்பில் சில பேரும்
ஏதோ தொழுவார்கள்
இல்லை அடுத்தவர்கள்

முப்பது நாள் தாடி
முழுதாக சேவ் ஆகும்
அப்புறம் வீண் விரயம்
அதிரும் பட்டாசால்

ஏழு மணி நாடகம்
எழும்பி உட்காரும்
மாலை நேர திக்ருகள்
மறந்து பறந்து போகும்

இன்பொக்ஸ் ஹாய் சொல்லல்
இன்பமாய்த் தொடங்கும்
அன்பென்று தொடங்கி
ஆபாசம் அரங்கேறும்

மக்காவை ரசித்த கண்கள்
மலையாளப் படத்தில் வரும்
அக்காவை ரசிக்கும்
ஆரும் இல்லா வேளையிலே

எவ்வாறு நோன்பிருந்தார்
இவர் தக்வா பெற்றாரா
ஷவ்வால் வந்த பின்னால்
சங்கதி புரிய வரும்

இப்படிச் செய்யாமல்
இறைவனைப் பயந்தவர்கள்
எப்போதும் பக்தியுடன்
இருப்பார் சிறப்பார்.

Web Design by The Design Lanka