ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்! - Sri Lanka Muslim

ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்!

Contributors

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக தமது சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் கொழும்பு திரும்புவதற்காக இன்று (17) முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ரயில்கள் அடுத்த திங்கட்கிழமை (18) வரை இயக்கப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தௌிவுப் படுத்திய ரயில்வேயின் துணை பொது மேலாளர் வீ.எஸ். பொல்வத்தகே ,

“17 மற்றும் 18 ஆம் திகதிகளில் தலா இரண்டு ரயில்கள் கொழும்பிலிருந்து பதுளைக்கும், பதுளையில் இருந்து கொழும்புக்கும் இயக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரை ஒரு ரயில் இயக்கப்படும். சிறப்பு ரயில் பெலியத்தவில் இருந்து கொழும்பு கோட்டை வரை 19 ஆம் திகதி காலை இயக்கப்படும். வழக்கமான ரயில்களுக்கு கூடுதலாக இந்த ரயில்கள் இயக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team