ரவி, தயா, ஐ.தே.க எம்.பிக்கள் குழு மகாசங்கத்தினரிடம் மன்னிப்புக் கோரியது - Sri Lanka Muslim

ரவி, தயா, ஐ.தே.க எம்.பிக்கள் குழு மகாசங்கத்தினரிடம் மன்னிப்புக் கோரியது

Contributors

சனல் 4 ஊடகவியலாளர்களை சிறிகொத்தவுக்கு வரவழைத்து சர்வதேசத்தின் முன் இலங்கையை பெரும் அசெளகரியத்திற்கு உள்ளாக்கியமை தொடர்பாக ஐக்கிய தேசியக்கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்க, தயாகமகே, ருவன் விஜேவர்தன குழுவினர் மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளனர். பெளத்த பிக்குமார்களுக்கு சிறிகொத்தவில் ஏற்பட்ட அசெளகரியம் தொடர்பாக தாம் கடும் கவலையடைவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் பெரும் கவலைப் படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மகா சங்கத்தினருக்கு தாக்குதல் நடத்த முயற்சி செய்த தேசத்துரோகிகளுக்கு எதிராக பொதுபலசேனா நேற்று சிறிகொத்த முன்னிலையில் நடத்திய மகாசத்தியாக்கிரகத்தின்

போது ஐ.தே.க. இதனைத் தெரிவித்துள்ளது. அண்மையில் சிறிகொத்தவில் நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியை பார்வையிடச் சென்ற பெளத்த பிக்குமார்கள் மீது இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டது. நாட்டை சீர்குலைக்கும் புலிகளை ஆதரிக்கும், பெளத்த தர்மத்திற்கு நிந்தனை தெரிவிக்கும், மகா சங்கத்தினருக்கு தாக்குதல் நடத்தும் இந்த என்.ஜி.ஓ. காரர்களைக் கைது செய்யுமாறும், அவர்களை நாட்டில் இருந்து வெளியேற்றுமாறும் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இங்கு தெரிவித்தார். அரசாங்கம் பொதுநலவாய மாநாட்டுக்கு தயாராகி இருந்த வேளையில், ஐக்கிய தேசியக்கட்சியின் தேசத்துரோகிகளும், டொலர்களை பெறும் என்.ஜி.ஓ. காரர்களும் மற்றுமொரு மாநாட்டுக்கு தயாராகி இருந்ததாகவும், அவர்கள் நடத்திய செயற்பாடுகளினால் இது தெளிவானதாகவும் தேரர் தெரிவித்தார்.

இத்தகைய கலகக் காரர்களுக்கு சிறிகொத்தவை வாடகைக்கு வழங்கி, நாட்டில் உள்ளக மட்டத்தில் தீர்த்துக் கொள்ளக்கூடிய பிரச்சினைகளை சர்வதேசத்தின் முன் வைப்பதன் நோக்கம் என்ன? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

தெற்கில் பெளத்த பயங்கரவாதத்தை அமுல்படுத்தும் அமைப்பு என எம்முடைய அமைப்பை அவர்கள் அடையாளப்படுத் துவது எந்த நோக்கத்திற்காக என்பதும் எமக்கு பிரச்சினையாகும். இக்கட்டத்தில் நாம் ஒன்றைக் கூற வேண்டும். நாட்டுக்காக உயிர்நீத்த 26,778 படைவீரர்கள் இந்த பூமியில் மண்ணுடன் மண்ணாக்கப்பட்டுவிட்டார்கள்.

அவ்வாறு வெற்றி கொண்ட நாட்டை நாம் பாதுகாக்க வேண்டுமென்றும் ஞானசார தேரர் தெரிவித்தார். ஐக்கிய தேசிய பிக்குமார் முன்னணியின் செயலாளர் இங்கினியாகல பாலித்த தேரர், இச்சம்பவம் தொடர்பாக பெரும் கவலை கொண்டுள்ளதாகவும் இந்த சந்திப்பு மகிழ்ச்சிக்குரியதென்றும் தெரிவித்தார்.

இங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதென்பதை ஏற்றுக் கொள்கின்றோம். அதற்காக மன்னிப்பு கோருகிறோம் என்று ரவி கருணாநாயக்க எம்.பி. தெரிவித்தார். இந்த சத்தியாக்கிரகத்தில் விஹாரன் தெனியே நந்த தேரர் உட்பட பிக்குமார்கள் பலரும் கலந்து கொண்டார்கள். thinakaran

Web Design by Srilanka Muslims Web Team