ரவூப் ஹக்கீமை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைமையிலிருந்து மாற்ற இரகசிய நகர்வு..! - Sri Lanka Muslim

ரவூப் ஹக்கீமை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைமையிலிருந்து மாற்ற இரகசிய நகர்வு..!

Contributors

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவா் ரவூா் ஹக்கீமை கட்சித்தலைவா் பதவியிலிருந்து அகற்றி புதிய தலைவா் ஒருவரை கொண்டுவருவரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இரகசிய முன்னெடுப்புகளை அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா்கள் இருவா், மாகாண முன்னாள் உறுப்பினா்கள் சிலர் மேற்கொண்டுள்ளதாக நம்பகரமாக அறியமுடிகின்றது.

இதற்கான இரகசியப் பேச்சுகள் சில தினங்களுக்கு முன்னா் கிழக்கு மாகாணத்தின் பிரசித்தி பெற்ற நகா் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

கட்சித்தலைவரின் செயற்பாடுகள், கட்சியின் கட்டுக்கோப்பினை மீறி செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமை, கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கு முன்னாள் உறுப்பினா் தவத்தை, முதலமைச்சா் வேட்பாளராக நியமிப்பது தொடர்பான கட்சியின் உத்தேசம் உட்பட்ட விடயங்களை முன்வைத்து அந்தக் கட்சியின் தலைவருக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team