ரஷ்யா: பயங்கரவாத தாக்குதல்களில் பாதிக்கப் பட்டோருக்கு முஸ்லிம்களின் மனிதநேய உதவிகள் - Sri Lanka Muslim

ரஷ்யா: பயங்கரவாத தாக்குதல்களில் பாதிக்கப் பட்டோருக்கு முஸ்லிம்களின் மனிதநேய உதவிகள்

Contributors

-A.J.M மக்தூம் – 

முஸ்லிம்கள் தங்கள் இரத்தம், பணம், முடியுமான மருந்து வகைகள் போன்றவற்றை நன்கொடையாக வழங்கி ரஷ்யா வோல்கோகிறேத் நகரில் இடம்பற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் பாதிக்கப் பட்டோருக்கு நேச கரம் நீட்டுமாறு ரஷ்யா முப்தி சபை மற்றும் ஸகாத் நலன்புரி நிதியம் என்பன இணைந்து வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளன.

அவசியம் ஏற்பட்டால் நேரடியாக சென்று பாதிக்கப் பட்டோருக்கு உதவி செய்ய ரஷ்யா முப்தி சபை திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக ஒரு தொண்டர் அணி தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வோல்கோகிறேத் நகரில் அன்மையில் இடம்பெற்ற இரட்டை தற்கொலைக் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 30 க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளதுடன், பலர் பாதிக்கப் பட்டுள்ள அதேவேளையில் பாரிய சேதங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.

பாதுகாப்பு காரணங்களைக் காட்டி முஸ்லிம்களை ஒடுக்க முற்படும் ரஷ்ய அதிகாரிகளின் எண்ணங்களை முறியடிக்கும் விதமாகவே முஸ்லிம்களின் குறித்த உதவிகள் அமைந்துள்ளன.

 

 

Web Design by Srilanka Muslims Web Team