ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஒருங்கிணைப்பில் குழாய்க் கிணறுகள் அன்பளிப்பு! - Sri Lanka Muslim

ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஒருங்கிணைப்பில் குழாய்க் கிணறுகள் அன்பளிப்பு!

Contributors

சமீப காலமாக நிலவிவரும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து நீர் பற்றாக்குறை மற்றும் நீர் கட்டண அதிகரிப்பினால் ஏற்பட்ட சிரமங்களை நிவர்த்தி செய்யும் முகமாக இனங்காணப்பட்ட கல்முனை, சாய்ந்தமருது மற்றும் பாலமுனை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கான குழாய்க் கிணறுகள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு அன்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்களும் அதன் அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட, பயனாளர்கள், பிரதேசவாசிகள், புத்திஜீவிகள், நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் ரஹ்மத் மன்சூர் அவர்கள் உரையாற்றுகையில், இதுபோன்ற பல வேலைத்திட்டங்களை அம்பாறை மாவட்டத்தின் பலபாகங்களுக்கு செவ்வனே செய்து வருவதையிட்டு பெரும் மகிழ்ச்சியடைவதோடு, இதுபோன்ற சேவைகள் செய்ய பெரிதும் பங்களிப்புச் செய்து வரும் Y.W.M.A. பேரவைக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் தனது ஆத்மார்த்தமான நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.

Web Design by Srilanka Muslims Web Team