ராகம வைத்தியசாலையில் உள்ள ஜூம்ஆ பள்ளிவாசலில் வேறு சக்திகள் ஆதிக்கம் செலுத்தும் அபாயம் - Sri Lanka Muslim

ராகம வைத்தியசாலையில் உள்ள ஜூம்ஆ பள்ளிவாசலில் வேறு சக்திகள் ஆதிக்கம் செலுத்தும் அபாயம்

Contributors

-அஸ்ரப் ஏ சமத்-

ராகம வைத்தியசாலையில் உள்ள ஜூம்ஆப் மஸ்ஜித்தை  கம்பஹா மாவட்டத்தில் உள்ள பள்ளிவசால் சம்மேளணம் ஊடாக முறையாக பராமரிக்குமாரும்  பராமரிக்க தவறும்போது   வேறு சக்திகளினால் குறித்த மஸ்ஜித் வேறு விடயங்களுக்கு பாவிக்களாம் . என  ராகம வைத்தியாசலையின் பிரதிப் பணிப்பாளா;  டாக்டர் தௌபீக் கம்பஹா அகதியா பாடசாலைகள் அமைப்பினரிடம்  தெரவிப்பு.

இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலை ஒன்றில் அதுவும் பெரும்பாண்மையினர் வாழும் பிரதேசத்தில் ஜூம்ஆப் பள்ளிவசால் ஒன்று அமைந்திருப்பது இங்கு மட்டும்தான். இங்கு ஒவ்வொரு வெள்ளியும் ஜூம்ஆத் தொழுகை நடைபெறுகின்றது. இவ் வைத்தியசாலையில் மருத்துவ வைத்திய பயிலுணர்கள் உட்பட 25 வைத்தியர்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் சம்மேளனம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு மௌலவியை அனுப்பி ஜீம்ஆத் தொழுகை நடாத்த வேண்டும். அத்துடன் பராமரிப்பதற்கும் ஒருத்தரை நியமிக் வேண்டும். அதனை சுற்றி வேலியமைத்து பாதுகாக்கவேண்டும். என டாக்டா; தௌபீக்  டொக்டர் முபாரக்கிடம் வேண்டுகோல் விடுத்தார்.

இவ் வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்க சார்பில்  டாக்டர் முபாறக்கின் முயற்சியினால் இரண்டரை இலட்சம் ரூபா  செலவில் வெளிநோயாளார் பிரிவுக்கு பெயிண்ட் அடித்துக் கொடுக்கப்பட்டது. அதனை வைத்தியசாலையின் பணிபப்பாளர் ; பெரேராவினால் திறந்து வைக்கப்பட்டது.

 

 
61532

Web Design by Srilanka Muslims Web Team