ராஜ­பக்க்ஷ குடும்ப உற­வினர் கம­ரூனின் கன்­சர்­வேட்டிவ் கட்­சிக்கு நிதி உதவி - மங்­கள சம­ர­வீர எம்.பி. - Sri Lanka Muslim

ராஜ­பக்க்ஷ குடும்ப உற­வினர் கம­ரூனின் கன்­சர்­வேட்டிவ் கட்­சிக்கு நிதி உதவி – மங்­கள சம­ர­வீர எம்.பி.

Contributors

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை விமர்சித்து இலங்கை அரசு அரசியல் செய்துகொண்டிருக்கின்ற
அதேவேளை மறுபுறத்தில் லண்டன் வாழ் ராஜபக் ஷ குடும்பத்து உறவினர் ஒருவர் கமரூனின் கன்சர் வேட்டிவ் கட்சிக்காக நான்கு இலட்சத்து 23,000 பவுண்ஸ்களை நிதியுதவியாக வழங்கியிருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் மாத்தறை மாவட்ட எம்.பி. யான மங்கள சமரவீர நேற்று சபையில் தகவல் வெளியிட்டார் .
பொதுநலவாய அமைப்பில் 53 நாடுகள் அங்கம் வகிக்கின்ற போதிலும் இலங்கையில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் 31 நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள் இம்மாநாட்டை நிராகரித்து பகிஷ்கரித்துள்ளனர் என்றும் அவர் கூறினார் .
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற 2014 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
மங்கள சமரவீர எம்.பி. இங்கு மேலும் கூறுகையில் ,
சுமார் 1500 கோடி ரூபா செலவில் இலங்கையில் பொதுநலவாய அரச தலைவர்களது உச்சிமாநாடு நடத்தப்பட்டது . எனினும் 53 நாடுகளைக் கொண்ட இவ்வமைப்பிலிருந்து 31 நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை . அந்நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வேறு தரப்பினரே இங்கு வந்தனர் . இதன் மூலம் இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய அமைப்பின் மாநாட்டை அத்தலைவர்கள் நிராகரித்து பகிஷ்கரித்துள்ளனர் . மேலும் 21 நாடுகளைச் சேர்ந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவர்களே இதில் கலந்து கொண்டிருந்தனர் .
இலங்கையின் நிலைமைகள் சர்வதேசத்துக்கு மூடிமறை க்கப்பட்ட நிலையிலேயே பொதுநலவாய மாநாடு நடத்தப்பட்டுள்ளது . பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடத்தப்பட்டதால் மக்களுக்கு எந்த நன்மையும் கிட்டி விடவில்லை .
பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு கொழும்பு – கட்டுநாயக்க அதிவேகப் பாதை நிர்மாணிக்கப்பட்டது . எனினும் இவ் அதிவேகப்பாதை அமைக்கப்பட்ட அந்த செலவீனத்தில் கென்யாவில் இரு மடங்கு பெரிதான அதிவேகப்பாதையை சீனா 2012 இல் அமைத்துக் கொடுத்துள்ளது .
அழகான நகரங்களையும் அழகான வீதிகளையும் நெடுஞ்சாலைகளையும் வட கொரியாவிலும் காணமுடியும் . கடாபியே இதனைச் செய்தார் . இதன்மூலம் பாரிய தரகுப்பணம் கறக்கப்பட்டது . அதேபோன்ற நிலைதான் இங்கும் காணப்படுகின்றது .
பொதுநலவாய மாநாடு இலங்கையில் இடம்பெறுவதற்கு முன்பதாக அதன் வரலாற்றை நோக்கினால் இலங்கையில் இடம்பெற்ற மாநாட்டிலேயே குறைவான அரச தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர் . நிறைவேற்று அதிகாரம் கொண்ட 21 அரச தலைவர்களே கலந்துகொண்ட அதேவேளை 31 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இதனை பகிஷ்கரித்துள்ளனர் .
எம்மீது புலி முத்திரை குத்தி ‘ ஷோகம் ‘ நடத்தப்பட்டது . ஆனாலும் ஹிக்கடுவையில் இடம்பெற்ற பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் புலிகள் அமைப்பின் கே.பி. கலந்துகொண்டிருந்தார் . அதேபோன்று தாமரைத் தடாக ஆரம்ப நிகழ்வில் கருணாவும் , கமரூன் யாழ்ப்பாணம் சென்ற வேளையில் அங்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நடவடிக்கைகளில் தயா மாஸ்ரரும் கலந்துகொண்டிருந்தனர் .
நிலைமை இவ்வாறிருக்க பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கையைப் பாவித்து அங்கு அரசியல் செய்வதைப் போன்று கமரூனைப் பாவித்து இங்குள்ளவர்கள் அரசியல் செய்கின்றார் .
இதேவேளை , இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு நிதியத்துக்கென டேவிட் கமரூன் தனது வரவு – செலவுத்திட்டத்தின் நிதி ஒதுக்கீடு செய்துள்ள அதேவேளை டேவிட் கமரூனின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ராஜபக் ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் 4 இலட்சத்து 23 ஆயிரம் பவுண்ஸ்களை அன்பளிப்புச் செய்துள்ளார் .
இந்த நிதி அங்கு ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளமையும் ஆவணங்களில் பதியப்பட்டுள்ளது என்றார் .

Web Design by Srilanka Muslims Web Team