ராணுவ சதிப் புரட்சி தேசத்துரோகம்:குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும் - Sri Lanka Muslim

ராணுவ சதிப் புரட்சி தேசத்துரோகம்:குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும்

Contributors

கெய்ரோ:ராணுவ சதிப்புரட்சி தேசத்துரோகம் என்றும், அதன் பின்னணியில் செயல்பட்டவர்களை குற்ற விசாரணைச் செய்யவேண்டும் என்றும் எகிப்தில் முதன் முறையாக ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முஹம்மது முர்ஸி தெரிவித்துள்ளார்.

ராணுவ சதிப்புரட்சி மூலம் அநியாயமாக பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள முஹம்மது முர்ஸியின் அறிக்கையை அவரது வழக்குரைஞர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் வாசித்தனர்.அதில் முஹம்மது முர்ஸி கூறியிருப்பது:

என்னை பதவி நீக்கம் செய்த பிறகு ராணுவம் நிறுவிய நீதிமன்றங்களுக்கும், சட்ட கட்டமைப்புகளுக்கும் எவ்வித அதிகாரமும் இல்லை.

ராணுவம் தனது தவறை திருத்தும் வரை நாட்டில் போராட்டங்கள் ஓயாது.எகிப்தில் சிந்தப்பட்ட ரத்தத்திற்கு ராணுவம் தான் பொறுப்பு என்று கூறியுள்ள முர்ஸி ராணுவ சதிப்புரட்சிக்கு பிறகு தான் எங்கு சிறைவைக்கப்பட்டேன் என்பதை விளக்கும்போது, அதிபர் மாளிகையின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்றிருந்த குடியரசு பாதுகாப்பு படையினர் என்னை கடத்திச் சென்றனர்.

நான்கு மாதங்களாக பலத்த பாதுகாப்புடன் கடற்படை மையத்தில் சிறை வைத்திருந்தனர். அவ்வேளையில் ஐரோப்பிய யூனியனின் கொள்கை உருவாக்க தலைவர் காதரின் ஆஷ்டன் மற்றும் நான்கு அரசு தரப்பு வழக்குரைஞர்களுடன் மட்டுமே சந்திக்க அனுமதித்தனர்.ஆனால், அரசு தரப்பு வழக்குரைஞர்களுடன் ஒத்துழைக்க நான் மறுத்துவிட்டேன்’ இவ்வாறு முர்ஸி கூறியுள்ளார்.

 

Web Design by Srilanka Muslims Web Team