ராஸிக் எழுதிய 'ஹெம்மாதுகமை முஸ்லிம்களின் வரலாறு சமுகவியல் நோக்கு' நூல் வெளியீடு » Sri Lanka Muslim

ராஸிக் எழுதிய ‘ஹெம்மாதுகமை முஸ்லிம்களின் வரலாறு சமுகவியல் நோக்கு’ நூல் வெளியீடு

boo.jpeg2.jpeg87

Contributors
author image

A.S.M. Javid

எம்.ஏ.ராஸிக் எழுதிய ஹெம்மாதுகமை முஸ்லிம்களின் வரலாறு சமுகவியல் நோக்கு நூல் வெளியீட்டு விழா கடந்த செவ்வாய்க் கிழமை (17) மாளிகாகந்தை அஷ்ஷபாப் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிஷாத் பதியுதீனும் கௌரவ அதிதியாக தேசிய நல்லிணக்க ஒருங்கிணைப்பு இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி மற்றும் மக்கா புனித கஃபாவின் பணிப்பாளர் ஸாதிக் ஹாஜியார், ஜனாதிபதிச் செயலகத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் எம்.கே.ராஹூலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது தலைமை உரையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீனும், விஷேட உரையை அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் உதவிச் செயலாளர் எம்.எஸ்.எம்.தாஸிமும் நன்றியுரையை நூலாசிரியர் எம்.ஏ.ராஸிக்கும் வழங்கினர்.

நூல் திறனாய்வை முன்னாள் உபவேந்தரும், பொதுச் சேவை ஆணைக்குழுவின் அங்கத்தவருமான பேராசிரியர் ஏ.ஜி.ஹூஸைன் இஸ்மாயில் வழங்கினார். இதன்போது நூலின் முதற் பிரதியை புரவலர் ஹாஸிம் உமர் அதிதிகள் முன்னிலையில் நூலாசிரியரிடமிருந்து பெற்றுக் கொண்டதுடன் சிறப்புப் பிரதிகளை ஸாதிக் ஹாஜியார், அமைச்சர் பௌசி, ஏ.ஜி.ஹூஸைன் இஸ்மாயில் உள்ளிட்ட ஏனையோரும் அதிதிகளிடமிருந்து பிரதிகளை பெற்றுக் கொண்டனர்.

bo

boo boo.jpeg2 boo.jpeg2.jpeg8 boo.jpeg2.jpeg87 boo.jpeg5

Web Design by The Design Lanka