ரிசாத் விமலை முறையிட்டது நல்லது: முசம்மில் விளக்கம்..! - Sri Lanka Muslim

ரிசாத் விமலை முறையிட்டது நல்லது: முசம்மில் விளக்கம்..!

Contributors


விமல் வீரவன்சவுக்கு எதிராக ரிசாத் பதியுதீன் முறையிட்டது நல்லது எனவும் சுயாதீனமாக இயங்கும் பொலிசார் நீதியை நிலை நாட்டவும் உண்மையை வெளிக்கொணரவும் இது நல்ல சந்தர்ப்பம் எனவும் தெரிவிக்கிறார் விமல் வீரவன்சவின் சகா முசம்மில்.

கடந்த அரசில் மூடி மறைத்த பல்வேறு விடயங்கள் இருப்பதாகவும் தற்போது பொலிசாருக்கு சுயாதீனமாக இயங்க முடியும் என்பதால் அவரது முறைப்பாட்டிலிருந்தே முறையாக விசாரணைகளை ஆரம்பிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

ஈஸ்டர் தாக்குதல்தாரி சஹ்ரானுடன் ரிசாத் மற்றும் சகோதரன் தொடர்பு வைத்திருந்ததாக விமல் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team