ரிஷாட்டுக்கு உதவியவர்களுக்கான வழக்கு மே மாதம்..! » Sri Lanka Muslim

ரிஷாட்டுக்கு உதவியவர்களுக்கான வழக்கு மே மாதம்..!

Contributors
author image

பர்விஸ் முஹம்மட்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு, சட்டத்திற்கு முரணாக உதவி செய்தவர்களது வழக்கு பிற்போடப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது புத்தளத்திலிருந்து வாக்காளர்களை மன்னாரிற்கு அழைத்து செல்ல இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்துகளை சட்ட விரோதமாக அழைத்து சென்ற குற்றச்சாட்டில், சட்டமா அதிபரின் உத்தரவின் பேரில் பிடி விறாந்து பிறப்பிக்கட்ட நிலையில் தலைமைறைவாகியிருந்த பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு, சட்டத்திற்கு முரணான வகையில் உதவி செய்த குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டோரது வழக்கு விசாரணை எதிர்வரும் மே 5 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.

கோட்டை நீதிமன்றினால் இன்றைய தினம் (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருந்த நிலையிலேயே குறித்த வழக்கு விசாரணைக்கான திகதி பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka