ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணை எதிர்வரும் 04.06.2021 வரை ஒத்திவைப்பு..! - Sri Lanka Muslim

ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணை எதிர்வரும் 04.06.2021 வரை ஒத்திவைப்பு..!

Contributors

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வழக்கு இன்று 28.05.2021 வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் முதற் தடவையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது உயர் நீதிமன்ற நீதியரசர்களில் ஒருவர் கடந்த உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் ஜானாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக இருந்த கொளரவ நீதியரசர் ஜனக்த சில்வா தான் இந்த வழக்கில் இருந்து தவிர்த்து கொள்வதாகவும் புதிய நீதியரசர் ஒருவர் நியமிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டது .

எனவே இதை தொடர்ந்து வழக்கு விசாரணை எதிர் வரும் 04/06/2021 வரை ஒத்திவைக்கப்பட்டது.

இவ் வழக்கு விசாரணையில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா, அனில் சில்வா , சிரேஷ்ட சட்டத்தரணிகளான என்.எம். சஹீட், ருஸ்தி ஹபீப் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் சட்டத்தரணியுமான அமீர் அலியும் ஆஜாராகினர்.

சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி தவராசா அவர்களின் வழிகாட்டலில் இடம் பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team