ரிஷாத் உள்ளிட்ட முஸ்லிம்களின் கைது விவகாரம் : சூடுபிடித்த பாராளுமன்றம் - Sri Lanka Muslim

ரிஷாத் உள்ளிட்ட முஸ்லிம்களின் கைது விவகாரம் : சூடுபிடித்த பாராளுமன்றம்

Contributors

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவது தொடர்பில் இன்று (22) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எடும் எதிர்ப்பு தெரிவித்து, அவரை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர். சிறைச்சாலைகளில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுவிப்பது தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷவினால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை அறிவிப்பு மீது கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

 

எதிர்க்கட்சி பிரதம கொரடா லக்க்ஷமன் கிரியெல்ல தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரஷாத் பதியுதீன் கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதியிலி ருந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

ஏப்ரல் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் ரிஷாத் பதியுதீன் குற்றமற்றவர் என ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் அவர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஆனால் ஆணைக்குழுவினால் குற்றம் சாட்டப்பட்ட பலர் இன்னும் வெளியில் இருக்கின்றார்கள் என்றார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவிக்கையில்,  பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்று வருகின்றன. அமைச்சர் நாமல் ராஜபக்ஷ்வுடன் ஒரே பாடசாலையில் கல்வி கற்ற,  சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் போன்றவர்கள் திரிபுபடுத்தப்படட்ட சாட்சிகளின் அடிப்படையில் நீண்டகாலமாக பிணை இல்லாமல் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

அவ்வாறிருக்கும்போது ஜெனீவாவில் மனித உரிமை தொடர்பான ஆணையாளர், இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்திக் கொண்டு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் பாரிய குற்றச்சாட்டுக்களை தெரிவித்திருக்கின்றார். இதனால் எமக்கு ஜிஎஸ்பி. வரிச் சலுகையும் இல்லாமல்போகும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பல மாதங்களாக எந்தக் குற்றச்சாட்டும் தெரிவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார். இது மிகவும் அநீதியாகும் என்றார்.

 

மேலும், எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ உரையாற்றும் போது, சானி அபேசேக மற்றும் ரிஷாத் பதியுதீனை போன்றோரை அரசு கைது செய்ததை நினைத்து வெட்கப்பட வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் நாடு வீழ்ச்சியை நோக்கும் என்று கருத்து தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team