ரிஷாத் பதியுதீன் சுகம் பெறவும் விடுதலையாகவும் கல்முனையில் பிரார்த்தனை நிகழ்வு..! - Sri Lanka Muslim

ரிஷாத் பதியுதீன் சுகம் பெறவும் விடுதலையாகவும் கல்முனையில் பிரார்த்தனை நிகழ்வு..!

Contributors

(பாறுக் ஷிஹான்)

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் சுகம் பெறவும் விரைவில் விடுதலை பெற்று வீடு திரும்பவும் பிரார்த்தனை செய்யும் நிகழ்வு நேற்று (20) மஹ்ரிப் தொழுகையின் பின்னர் அக்கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான கே.எம். அப்துல் றஸாக் தலைமையில் கல்முனை பட்டின ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை மாநகர உறுப்பினர் எம்.எச்.எம். அப்துல் மனாப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கடந்த சில மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் அண்மையில் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் சுகமாகி விடுதலை செய்யப்பட வேண்டும் என கல்முனை பட்டின ஜும்மா பள்ளிவாசல் பேஸ் இமாம் துஆ பிராத்தனை நிகழ்த்தினார்.

இந்த துஆ பிராத்தனையின்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் ஜுனைதீன் மான்குட்டி, கல்முனை பிராந்திய முக்கியஸ்தர் கலீல் முஸ்தபா உட்பட கட்சி ஆதரவாளர்கள் பலரும் சுகாதார வழிமுறைகளை பேணி கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team