ரெக்டோ நிறுவனத்தினால்  கங்கதலாவ ஊடகவியலாளர் சங்கத்தினருக்கு கொவிட் 19 கொரோனா உபகரணங்கள் வழங்கி வைப்பு..! - Sri Lanka Muslim

ரெக்டோ நிறுவனத்தினால்  கங்கதலாவ ஊடகவியலாளர் சங்கத்தினருக்கு கொவிட் 19 கொரோனா உபகரணங்கள் வழங்கி வைப்பு..!

Contributors

எப். முபாரக் 

கிராமிய பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு கல்வி அபிவிருத்தி(ரெக்டோ) அமைப்பின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கங்கதலாவ ஊடகவியலாளர் சங்கத்தினருக்கு கொவிட் 19 கொரோனா உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ரெக்டோ அமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜே.எம்.அஸார் அவர்களின் ஏற்பாட்டில் இன்று(3) கொவிட் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கங்கதலாவ ஊடக அமைப்பினால் விடுத்த வேண்டுகோளுக்கமைய ரெக்டோ அமைப்பினால் வழங்கப்பட்டன.

இதில் பத்துக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு கொவிட் உபகரணங்களை பெற்றுக்கொண்டார்கள்.

Web Design by Srilanka Muslims Web Team